உலகம்

இலவசத்தை நம்பியதால் வீங்கிய உதடு- அமெரிக்க மாடல் அழகியின் அறிவுரை

Published On 2023-04-19 16:04 IST   |   Update On 2023-04-19 16:04:00 IST
  • சில நிமிடத்தில் ஜெசிகாவின் உதடுகள் வீங்கத் தொடங்கி அலர்ஜி ஏற்பட்டது.
  • நேரம் செல்ல செல்ல ஜெசிக்கா புர்கோ உதடுகள் வீங்கிக் கொண்டே இருந்தது.

அமெரிக்காவை சேர்ந்தவர் மாடல் அழகி ஜெசிக்கா புர்கோ. இவர் தனது உதட்டை அழகாக்குவதற்காக லிப் பில்லர் எனப்படும் சிகிச்சையை ஒரு மையத்தில் எடுத்து வந்துள்ளார். இதுவரை 6 முறை அந்த சிகிச்சையை எடுத்த நிலையில், அவருக்கு டாக்டர் போன் செய்து தற்போது மார்க்கெட்டில் புதிய லிப் பில்லர் வந்துள்ளது. அதை உங்களுக்கு இலவசமாக தருகிறேன் என கூறி உள்ளார்.

உடனே ஜெசிகா ஆசையுடன் ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு டாக்டர் லிப் பில்லரை ஜெசிகாவுக்கு செலுத்தி உள்ளார். ஆனால் சில நிமிடத்தில் ஜெசிகாவின் உதடுகள் வீங்கத் தொடங்கி அலர்ஜி ஏற்பட்டது. மேலும், நேரம் செல்ல செல்ல அவரது உதடுகள் வீங்கிக் கொண்டே இருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெசிகா தனது மனக்குமுறலை வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.

பின்னர் அவர் உரிய மருந்துகள் செலுத்தியதையடுத்து உதடு இயல்பு நிலைக்கு வந்துள்ளது. யாராவது, இலவசம் தருகிறேன் என கூறினால் தயவு செய்து அதை நம்பி யாரும் சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தி உள்ளார்.

Tags:    

Similar News