உலகம்

வெளிநாட்டு நிதிமுறைகேடு - அம்னெஸ்டி நிறுவன அதிகாரிக்கு ரூ.10 கோடி அபராதம்

Published On 2022-07-09 15:46 IST   |   Update On 2022-07-09 15:46:00 IST
  • அம்னெஸ்டி நிறுவனத்துக்கு ரூ.51.72 கோடியை அமலாக்கத்துறை அபராதமாக விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்துக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது.
  • அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அகார் படேலுக்கு ரூ.10 கோடி அபராதமாக விதிக்கப்பட்டது.

இங்கிலாந்தை சேர்ந்த அம்னெஸ்டி நிறுவனமானது அன்னிய நேரடி முதலீட்டில் இந்திய நிறுவனங்கள் மூலம் நிதியை பெற்றது. வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத்தின் விதிகளுக்கு புறம்பான வகையில் அந்நிறுவனம் நிதியை பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது.

இந்த நிலையில் அம்னெஸ்டி நிறுவனத்துக்கு ரூ.51.72 கோடியை அமலாக்கத்துறை அபராதமாக விதித்துள்ளது. இதுதொடர்பாக அந்நிறுவனத்துக்கு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. இதேபோல அந்நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியான அகார் படேலுக்கு ரூ.10 கோடி அபராதமாக விதிக்கப்பட்டது.

Tags:    

Similar News