உலகம்

தேர்தலில் வெற்றி பெற்ற இத்தாலிய தலைவர் மெலோனிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Update: 2022-09-28 07:40 GMT
  • ‘இத்தாலியின் சகோதரர்கள்’ கட்சியின் தலைவர் ஜியார்ஜியா மெலோனி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
  • ஜியார்ஜியா மெலோனிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இத்தாலியில் நடந்த பொதுத் தேர்தலில் தீவிர வலதுசாரியான 'இத்தாலியின் சகோதரர்கள்' கட்சி வெற்றி பெற்றது.

இதையடுத்து அக்கட்சியின் தலைவர் ஜியார்ஜியா மெலோனி பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். அவர் இத்தாலியில் முதல் பெண் பிரதமர் ஆவார்.

ஜியார்ஜியா மெலோனிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், "தேர்தலில் பெற்ற வெற்றிக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள். நமது இரு நாட்டு உறவுகளை வலுப்படுத்த ஒருங்கிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கி இருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News