உலகம்

ஜெர்மனி சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு பிரதமர் மோடி இன்று ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு செல்கிறார்

Published On 2022-06-28 06:45 GMT   |   Update On 2022-06-28 10:28 GMT
  • மாநாட்டில் பருவ நிலை, எரி சக்தி, சுகாதாரம் ஆகியவை தொடர்பான அமர்வில் மோடி பங்கேற்று பேசினார்.
  • ஜி-7 மாநாட்டில் போரிஸ் ஜான்சன், புமியோ கிஷிடா, மரியோ டிராகி ஆகியோரை சந்தித்தேன்.

துபாய்:

ஜி-7 அமைப்பின் மாநாடு ஜெர்மனியில் உள்ள ஸ்கிளாஸ் எல்மாவ் நகரில் நடந்து வருகிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

மாநாட்டில் பருவ நிலை, எரி சக்தி, சுகாதாரம் ஆகியவை தொடர்பான அமர்வில் மோடி பங்கேற்று பேசினார்.

இதற்கிடையே இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ஆகியோரை சந்தித்து பேசினார். இதுகுறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறும்போது, ஜி-7 மாநாட்டில் போரிஸ் ஜான்சன், புமியோ கிஷிடா, மரியோ டிராகி ஆகியோரை சந்தித்தேன்.

இந்த சந்திப்புகள் அற்புதமாக அமைந்தது என்று தெரிவித்துள்ளார். மேலும் செனகல் அதிபர் மெக்கிசால், உலக சுகாதார அமைப்பு தலைவர் டெட்ராஸ் அதானோம் ஆகியோரை சந்தித்தார். ஐரோப்பிய ஒன்றிய கூட்டமைப்பு தலைவர் உர்சுலா வான்டெர் லேயனை மோடி சந்தித்து பேசினார்.

ஜி-7 மாநாட்டை முடித்து விட்டு பிரதமர் மோடி இன்று நாடு திரும்பும் வழியில் ஐக்கிய அரபு எரேட்சுக்கு செல்கிறார். அங்கு ஐக்கிய அரபு எரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யானை சந்திக்கிறார். பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு நாடு திரும்புகிறார்.

Tags:    

Similar News