உலகம்

இந்துஜா குழும தலைவர் எஸ்பி இந்துஜா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழப்பு

Published On 2023-05-17 20:29 IST   |   Update On 2023-05-17 20:29:00 IST
  • 87 வயதான இந்துஜா குழும தலைவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தார்.
  • பிரிட்டனை சேர்ந்த எஸ்பி இந்துஜாவின் உயிர் லண்டனில் பிரிந்தது.

இந்துஜா குழும தலைவரும், இந்துஜா குடும்பத்தின் மூத்தவருமான ஸ்ரீசந்த் பரம்சந்த் இந்துஜா உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்தார். இவருக்கு வயது 87. கடந்த சில காலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், லண்டனில் அவரது உயிர் பிரிந்தது.

முன்னதாக இந்துஜா குழும தலைவர் மற்றும் அவரது சகோதரர்கள் கோபிசந்த் மற்றும் பிரகாஷ் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஆயுத உற்பத்தியாளரான ஏபி போஃபோர்ஸ்-க்கு இந்திய அரசின் ஒப்பந்தத்தை வாங்கி கொடுக்க இந்திய மதிப்பில் ரூ. 63 கோடியே 87 லட்சத்து 48 ஆயிரத்து 048 வரை சட்டவிரோதமாக பணம் பெற்றனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பின் இவர்கள் மீது எந்த தப்பும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

"கோபிசந்த், பிரகாஷ், அசோக் மற்றும் இந்துஜா குழுமத்தை சேர்ந்த அனைவரின் சார்பாக எங்களது குடும்ப தலைவர் மற்றும் இந்துஜா குழும தலைவருமான எஸ்.பி. இந்துஜா இன்று உயிரிழந்தார் என்பதை கனத்த மனதோடு அறிவிக்கிறோம்," என்று இந்துஜா குழும செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். 

Tags:    

Similar News