உலகம்

போரை நிறுத்த போப் பிரான்சிஸ் வேண்டுகோள்

Published On 2023-10-09 08:46 IST   |   Update On 2023-10-09 08:46:00 IST
  • இஸ்ரேலில் தற்போது நடப்பது அச்சமும், வேதனையும் அளிக்கிறது.
  • பயங்கரவாதமும், போரும் தீர்வுகளை கொண்டுவருவதில்லை.

வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனைக்கு பிறகு பொதுமக்கள் மத்தியில் பேசிய கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் இஸ்ரேல்-ஹமாஸ் போர் குறித்து வேதனை தெரிவித்தார்.

இது குறித்து அவர் பேசுகையில், "இஸ்ரேலில் தற்போது நடப்பது அச்சமும், வேதனையும் அளிக்கிறது. பயங்கரவாதமும், போரும் தீர்வுகளை கொண்டுவருவதில்லை, மரணத்தை மட்டுமே கொண்டு வருகின்றன. போர் ஒரு தோல்வி. ஒவ்வொரு போரும் தோல்விதான். எனவே போரை உடனடியாக நிறுத்தும்படி இருதரப்பையும் வேண்டுகிறேன்" என்றார்.

இதனிடையே இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே பதற்றம் அதிகரித்து வருவது குறித்து கவலை தெரிவித்துள்ள சீனா, நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கவும், பொதுமக்களைப் பாதுகாக்கவும் அமைதி காக்கும்படி இருதரப்பையும் வலியுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News