உலகம்

124-வது பிறந்தநாள் கொண்டாடிய உலகின் வயதான நபர்

Published On 2024-04-11 04:36 GMT   |   Update On 2024-04-11 04:36 GMT
  • 12 தசாப்தங்களுக்கு மேலான வாழ்க்கையின் மைல்கல்லை கடந்துள்ள மார்சிலோனா அபாத் கடந்த 5-ந்தேதி 124-வது பிறந்தநாளை கொண்டாடினார்.
  • பழங்கள் மற்றும் ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் தான் எனக்கு சுறுசுறுப்பும், ஆரோக்கியமும் இருப்பதாக அபாத் கூறினார்.

பெரு நாட்டை சேர்ந்த 124 வயதான மார்சிலோனா அபாத் என்ற முதியவர் உலகின் வயதான நபர் என்று நம்பப்படுகிறார். இவர் 1900-ம் ஆண்டு ஏப்ரல் 5-ந்தேதி ஹுவான்கோ பகுதியில் பிறந்ததாக கூறப்படுகிறது.

அந்த பகுதியின் பசுமை மற்றும் வன விலங்குகளுக்கு மத்தியில் நிம்மதியாக வாழ்ந்ததால் அபாத்தின் உடல்நலம் தேறியதாக அந்த நாட்டின் அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

12 தசாப்தங்களுக்கு மேலான வாழ்க்கையின் மைல்கல்லை கடந்துள்ள மார்சிலோனா அபாத் கடந்த 5-ந்தேதி 124-வது பிறந்தநாளை கொண்டாடினார். இது கின்னஸ் உலக சாதனையில் அபாத்தின் பெயரை உலகின் வயதான நபராக பதிவு செய்ய உதவியதாக பெரு நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழங்கள் மற்றும் ஆட்டிறைச்சியை சாப்பிடுவதால் தான் எனக்கு சுறுசுறுப்பும், ஆரோக்கியமும் இருப்பதாக அபாத் கூறினார்.

Tags:    

Similar News