உலகம்

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்படி இந்தியா தண்ணீர் தரவில்லை என்றால், பாகிஸ்தான் போரில் ஈடுபடும்: பிலாவல் பூட்டோ

Published On 2025-06-23 18:21 IST   |   Update On 2025-06-23 18:21:00 IST
  • இந்தியாவுக்கு இரண்டு ஆப்சன் உள்ளது. ஒன்று நியாயமாக தண்ணீரை பகிர்வது.
  • அல்லது நாங்கள் அனைத்து ஆறுகளில் இருந்தும் தண்ணீரை திறந்து விடுவோம்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா, பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது. இதில் 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இதனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. அதற்கும் இந்தியா தக்க பதிலடி கொடுத்தது. 4 நாட்களாக நீடித்த சண்டை போராக மாறும் சூழ்நிலை ஏற்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை மூலம் சண்டை நிறுத்தப்பட்டது.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு தண்ணீர் வழங்கும் சிந்து நதிநீர் (Indus Waters Treaty) ஒப்பந்தத்தை சஸ்பெண்ட் செய்தது இந்திய அரசு. சமீபத்தில் இந்திய உள்ளதுறை அமைச்சர் அமித் ஷா, சிந்து நீதி நீர் ஒப்பந்தம் சஸ்பெண்ட் செய்யப்பட்டது திரும்பப்பெற மாட்டாது எனத் தெரிவித்தார். இதற்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரான பிலாவல் பூட்டோ சர்தாரி, இந்தியா தண்ணீர் திறந்து விடவில்லை என்றால், பாகிஸ்தான் போரில் ஈடுபடும் எனத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிலாவல் பூட்டோ-சர்தாரி, "இந்தியாவுக்கு இரண்டு ஆப்சன் உள்ளது. ஒன்று நியாயமாக தண்ணீரை பகிர்வது. அல்லது நாங்கள் அனைத்து ஆறுகளில் (சிந்து நிதிப் படுகையில் உள்ள 5 ஆறுகள்) இருந்தும் தண்ணீரை திறந்து விடுவோம். சஸ்பெண்ட் முடிவை பின்பற்றுவோம் என இந்தியா மிரட்ட முடிவு செய்தால், நாங்கள் மீண்டும் போரை நடத்த வேண்டியிருக்கும். இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்த மறுத்தால், பயங்கரவாதம் குறித்து ஒருங்கிணைப்பு இல்லாவிட்டால், இரு நாடுகளிலும் வன்முறை தீவிரமடையும்" எனத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News