உலகம்

பூமியை கடந்து செல்லும் 3 பெரிய விண்கற்கள்- நாசா தகவல்

Published On 2024-10-27 14:45 IST   |   Update On 2024-10-27 14:45:00 IST
  • 2020 டபிள்யூ.ஜி என அழைக்கப்டும் இந்த விண்கல் 500 அடி விட்டம் கொண்டது.
  • விண்கற்கள் செல்லும் பாதையில் குறுக்கே எதுவும் இல்லை.

பூமியை 3 பெரிய விண்கற்கள் கடந்து செல்ல உள்ளதாக அமெரிக்க விண்வெளி கழகமான நாசா தெரிவித்துள்ளது. இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறியதாவது:-

பூமியை 3 விண்கற்கள் மிக நெருக்கமாக கடந்து செல்ல இருக்கிறது என்பதை நாசா கண்டுபிடித்திருக்கிறது. அதன்படி முதல் விண்கல் பூமியை கடந்து செல்கிறது. 2024 டிபி2 என்று பெயிரிடப்பட்ட இந்த விண்கல் 110 அடி விட்டம் இருக்கும். 7.31 லட்சம் கி.மீ தொலைவில் இது பூமியை கடந்து செல்கிறது. இதன் பாதை இப்போது வரை சீராகத்தான் இருக்கிறது. ஒருவேளை கடைசி நேரத்தில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டு இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டால் பூமிக்கு பாதிப்பு ஏற்படலாம். 2-வது விண்கல் 2007 யூடி3.பூமியிலிருந்து 42 லட்சம் கி.மீ தொலைவில் இது கடந்து செல்ல இருப்பதால் பெரிய அளவுக்கு பாதிப்பு ஏதும் ஏற்படாது. ஆனால் 3-வது விண்கல்தான் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

2020 டபிள்யூ.ஜி என அழைக்கப்டும் இந்த விண்கல் 500 அடி விட்டம் கொண்டது. பூமியிலிருந்து சுமார் 30 லட்சம் கி.மீ தொலைவில் மணிக்கு 33,947 கி.மீ வேகத்தில் இது செல்கிறது. இதன் பாதையில் மாற்றம் ஏற்பட்டு பூமியை மோதினால், அது விழுந்த இடத்தில் 2 கி.மீ ஆழத்திற்கு 4 கி.மீ அகலத்திற்கு பெரும் பள்ளம் உருவாகும். மேலும் 10 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்படும். விண்கல் விழுந்த இடத்திலிருந்து 500 முதல்1000 கி.மீ சுற்றளவுக்கு எந்த கட்டிமும் இருக்காது. எல்லாம் தரைமட்டமாகிவிடும். தவிர, எரிமலை வெடிப்பு, சுனாமி ஏற்படும்.

ஆனால் இது எதுவும் தற்போது நடக்காது என்று நம்பிக்கை உள்ளது. ஏனென்றால் இந்த விண்கற்கள் செல்லும் பாதையில் குறுக்கே எதுவும் இல்லை. இதனால் பூமி பக்கம் திரும்பும் இல்லை என்றனர்.

Tags:    

Similar News