உலகம்
வீடு பரிசளித்த கிம் ஜாங் உன்

செய்தி வாசிப்பாளருக்கு சொகுசு வீடு பரிசளித்து கவுரவித்த கிம் ஜாங் உன்

Published On 2022-04-16 13:17 GMT   |   Update On 2022-04-16 13:17 GMT
சிறுவயதில் இருந்தே தொகுப்பாளராக பணியாற்றிய ரி சுன் ஹி நாட்டின் பொக்கிஷங்களில் ஒருவர் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் பாராட்டியுள்ளார்.
சியோல்:

வடகொரிய அதிபராக இருந்து வருபவர் கிம் ஜாங் உன். உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறி தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறார்.
ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டு தொடர்ந்து உலக நாடுகளுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் செய்தியாளர் ரின் சுன் ஹி என்பவருக்கு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பை பரிசாக வழங்கி கவுரவித்துள்ளார்.

70 வயதாகும் ரி சுன் ஹி, கடந்த 50 ஆண்டு காலமாக வடகொரியாவின் மிக முக்கியமான நிகழ்வுகள் சிலவற்றை செய்திகளாக வழங்கி புகழ்பெற்றவர்.

1994-ம் ஆண்டு தந்தை கிம் இல் சுங்கின் மரணம், 2006-ல் வடகொரியா முதல் அணு ஆயுத சோதனை வரை என பல்வேறு முக்கிய நிகழ்வுகளை செய்திகளாக வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரி சுன் ஹி செய்தியாளராக 50 ஆண்டு நிறைவு செய்ததை கவுரவிக்கும் விதமாக அவருக்கு அடுக்குமாடி குடியிருப்பை கிம் பரிசாக வழங்கியுள்ளார்.

Tags:    

Similar News