உலகம்
பிரேசில் கனமழை

பிரேசில் நிலச்சரிவு - பலி எண்ணிக்கை 117 ஆக அதிகரிப்பு

Published On 2022-02-18 01:01 GMT   |   Update On 2022-02-18 01:01 GMT
பிரேசிலில் பெய்து வரும் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100க்கும் அதிகமானோர் மாயமாகி உள்ளனர்.
பிரேசிலியா:

பிரேசில் நாட்டில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.

ரியோ டி ஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் கனமழை கொட்டியதால் ஆறுகள் நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் மண்ணில் புதைந்தனர். மீட்புப் பணியில் ராணுவ வீரர்கள் ஈடுபட்டனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில், தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணியில் பல உடல்கள் மீட்கப்பட்டன. வெள்ளம்-நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 117 ஆக உயர்ந்தது.

மேலும் 100-க்கும் அதிகமானோரை காணவில்லை என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News