செய்திகள்
சிறை தண்டனை

அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு ஜெயில் தண்டனை

Published On 2020-10-28 07:41 GMT   |   Update On 2020-10-30 20:28 GMT
அமெரிக்காவில் பாலியல் குற்றச்சாட்டில் தொழில் அதிபருக்கு 120 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நியூயார்க் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
நியூயார்க்:

அமெரிக்காவில் நிக்ஸிவம் நிறுவனர் கெய்த்ரானியர். இவர் வாழ்க்கை நெறிமுறைகள் தொடர்பான தன்னம்பிக்கை பேச்சுகளை பேசி வந்தார். இதனால் இவருக்கு பலர் தீவிர தொண்டர்களாக மாறியுள்ளனர். நியூயார்க்கை தலைநகராக கொண்டு செயல்படும் அவரது மல்டி லெவல் மார்க்கெட்டிங் அமைப்பில் ஆயிரக்கணக்கானோர் உறுப்பினர்களாக உள்ளனர்.

கெய்த்ரானியர் மீது பல்வேறு பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அவர் நூற்றுக்கணகான பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருந்ததாகவும், சிறுவர்களை ஆபாச படங்கள் எடுத்ததாக புகார்கள் கூறப்பட்டது. இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. இந்தநிலையில் பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் கெய்த்ரானியருக்கு 120 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நியூயார்க் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.
Tags:    

Similar News