செய்திகள்
இந்திய செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்: டிஸ் ஹோம் நிர்வாக இயக்குனர்
இந்திய செய்தி சேனல்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக நேபாள டிஸ் ஹோம் நிர்வாக இயக்குனர் சுதீப் ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கடந்த மே மாதம் 8-ம் தேதி உத்தரகண்ட் மாநிலத்தில் தார்ச்சலாவுடன் லிபுபேக் பாஸை இணைக்கும் 80 கி.மீ சாலையை திறந்து வைத்தார். இதனையடுத்து இந்தியா - நேபாளம் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது.
நேபாளம் இந்திய எல்லைப்பகுதிகளான லிபுலேக், கலாபானி மற்றும் லிம்பியாதுரா ஆகியவற்றை உள்ளடக்கிய வரை படத்தை வெளியிட்டது. இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தது. தொடர்ந்து நேபாள பிரதமர் சர்மா ஒலிக்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள்ளில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது. நேபாள பிரதமர் சர்மா ஒலி, தனது ஆட்சியை கவிழ்க்க இந்தியா தூதரகம் மூலம் சதி செய்கிறது என்று குற்றாம்சாட்டினார்.
பிரதம் ஒலியின் இந்த பேச்சு முன்னாள் பிரதமர் பிரச்சந்தா மற்றும் மூத்த கம்யூனிஸ்ட் தலைவர்கள் இந்திய விரோத போக்குகள் அரசியல் ரீதியாக சரியல்ல எனவும், ராஜதந்திர ரீதியில் பொருத்தமானவை அல்ல என கூறினர்.
இதனிடையே நேபாள நாட்டின் கேபிள் டி.வி. ஆபரரேட்டர்கள் நேபாளத்தின் உணர்வை புண்படுத்தும் அறிக்கைகளை ஒளிபரப்பியதாக குற்றம்சாட்டியதோடு மத்திய அரசின் சேனலான தூர்தர்ஷனை தவிர்த்து மற்ற அனைத்து இந்திய செய்தி சேனல்களை ஒளிரப்புவதை தடைசெய்தது. இதனை நேபாளத்தின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் வரவேற்று நன்றி தெரிவித்தது.
இந்நிலையில் ஜீ நியூஸ், இந்தியா டி.வி., ஏபிபி நியூஸ், உள்பட அனைத்து சேனல்கள் மீதான தடை நீக்கப்பட்டு ஒளிபரப்பு செய்யப்படுவதாக நேபாள டிஸ் ஹோம் நிர்வாக இயக்குனர் சுதீப் ஆச்சார்யாக தெரிவித்துள்ளார்.