செய்திகள்

பிரேசில் அதிபராக ஜேர் போல்சோனாரா பதவியேற்றார்

Published On 2019-01-02 04:15 GMT   |   Update On 2019-01-02 05:17 GMT
பிரேசில் நாட்டில் நேற்று பலத்த பாதுகாப்புடன் நடந்த விழாவில், புதிய அதிபராக ஜேர் போல்சோனாரா பதவியேற்றார். #Brazilspresident
பிரேசிலியா:

பிரேசில் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிபர் பதவிக்கான தேர்தலில் முன்னாள் ராணுவ கேப்டனும், சமூக தாராளவாத கட்சியின் தலைவருமான ஜேர் போல்சோனாரா (வயது 63), இடதுசாரி வேட்பாளர் சிரோ கோம்ஸ், தொழிலாளர் கட்சி வேட்பாளர் பெர்னாண்டோ ஹேடட் ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது.

நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவது, வேலைவாய்ப்பை அதிகரிப்பது, ஊழலை ஒழிப்பது உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளுடன் ஜேர் போல்சோனாரா தீவிர பிரச்சாரம் செய்தார். பிரச்சாரத்தின்போது அவரை ஒருவர் கத்தியால் குத்தினார். வயிற்றில் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.

இந்த தாக்குதலுக்குப் பிறகு ஜேர் போல்சோனாராவுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்தது. தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் ஜேர் போல்சோனாரா.



இதையடுத்து தலைநகர் பிரேசிலியாவில் உள்ள பாராளுமன்றத்தில் நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது புதிய அதிபராக ஜேர் போல்சோனாரா பதவியேற்றுக்கொண்டார். துணை அதிபராக ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் ஹேமில்டன் மவுராவ் பதவியேற்றார். #Brazilspresident

Tags:    

Similar News