செய்திகள்

பாகிஸ்தானில் ஓய்வுபெற்ற நீதிபதிக்கு 2224 கார்களா? - அதிகாரிகள் அதிர்ச்சி

Published On 2018-10-29 21:50 IST   |   Update On 2018-10-29 21:50:00 IST
பாகிஸ்தானில் ஓய்வுபெற்ற 82 வயது நீதிபதியின் பெயரில் 2 ஆயிரத்து 224 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #2224cars #FormerJudge2224cars
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தான் நாட்டின் நீதிபதியாக பணியாற்றி ஓய்வுபெற்றவர் சிக்கந்தர் ஹயாத்(82). இவரது பெயரில் பதிவாகியுள்ள ஒரு கார் தொடர்பான சட்டமீறல் தொடர்பாக  சிக்கந்தர் ஹயாத்துக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

நோட்டீஸ் அனுப்பப்பட்ட சிக்கந்தர் ஹயாத்துக்கு சொந்தமாக ஒரேயொரு கார் மட்டுமே உள்ள நிலையில் வேறொரு பதிவு எண் கொண்ட கார் செய்த விதிமீறலுக்கு தனது கட்சிக்காரருக்கு அபராத நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஓய்வுபெற்ற நீதிபதி சிக்கந்தர் ஹயாத் சார்பில் அவரது வழக்கறிஞர் பஞ்சாப் மாகாண வரிவிதிப்பு துறை அதிகாரிகளை அணுகி விசாரித்தார்.

அப்போது சிக்கந்தர் ஹயாத் பெயரில் மொத்தம்  2 ஆயிரத்து 224 கார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தது.

இதைதொடர்ந்து, பயன்படுத்தாத காருக்கு அபராதம் செலுத்த நோட்டீஸ் அனுப்பப்பட்ட இவ்விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட் மனுதாரரின் புகார் தொடர்பாக இன்னும் ஒருவாரத்துக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு பஞ்சாப் மாகாண வரிவிதிப்பு துறை இயக்குனர் மற்றும் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளது. #2224cars #FormerJudge2224cars
Tags:    

Similar News