செய்திகள்

எகிப்தில் போலி கற்பழிப்பு புகார் கூறிய பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில்

Published On 2018-09-30 06:47 GMT   |   Update On 2018-09-30 08:27 GMT
பேஸ்புக் வீடியோவில் போலி கற்பழிப்பு புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்திய எகிப்து பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.
கெய்ரோ:

எகிப்து நாட்டை சேர்ந்த இளம்பெண் அமல் பேதி. தனது பேஸ்புக்கில் 12 நிமிடங்கள் ஓடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் தான் ஒரு தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த பெண் என்றும், தான் வங்கியில் பணிபுரிந்த போது பாலியல் கொடுமைக்கு ஆளானதாகவும், பல்வேறு பரபரப்பு தகவல்களை வெளியிட்டு இருந்தார்.

இது எகிப்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி விசாரணை நடத்தியதில், அவர் வெளியிட்ட தகவல்கள் அனைத்தும் போலி என தெரியவந்தது. இதையடுத்து இளம்பெண் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் இளம் பெண்ணுக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 140 நாட்கள் ஜெயில் தண்டனையை அனுபவித்துவிட்டதால் எஞ்சிய நாட்களை சிறையில் கழிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News