செய்திகள்

மூன்றாம் பாலினத்தவர்களின் கழிப்பறைகளுக்காக 34 லட்சம் பவுண்டுகளை செலவிடும் பல்கலைக்கழகம்

Published On 2018-09-15 14:34 GMT   |   Update On 2018-09-15 14:34 GMT
பிரிட்டன் நாட்டில் உள்ள பிரிஸ்ட்டல் பல்கலைக்கழகம் மாற்றுப் பாலினத்தவர்களின் கழிப்பறை வசதிக்காக சுமார் 30 கோடி ரூபாயை செலவிட முன்வந்துள்ளது. #BristolUniversity #neutralunitoilets
லண்டன்:

உலகின் பல நாடுகளில் ஆண்-பெண்களுக்கு நிகராக மூன்றாம் பாலினத்தவர்களுக்கான சம உரிமைகள் தேவை என உரிமைக்குரல் ஒலித்து வருகிறது. இந்த கோரிக்கையை சில நாடுகள் உடனடியாக செவிமடுத்து, செயலில் இறங்குகின்றன. பல நாடுகளில் செவிடன் காதில் ஊதிய சங்காக இந்த குரல் தேய்ந்து மறைந்து விடுகிறது.

இந்நிலையில், மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும்  பிரிட்டன் நாட்டின் பிரிஸ்ட்டல் நகரில் இயங்கிவரும் பிரிஸ்ட்டல் பல்கலைக்கழக நிர்வாகம் மூன்றாம் பாலினத்தவர்கள் பயன்படுத்தத்தக்க கழிப்பறைகளை கட்டுவதற்காக 34 லட்சம் பவுண்டுகளை செலவிட முன்வந்துள்ளது.

இந்த பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள 30 கட்டிடங்களில் தற்போது இருபாலருக்கு உள்ள கழிப்பறைகளைபோல் இன்னும் நான்காண்டுகளில் மூன்றாம் பாலினத்தவர்களும் கழிப்பறைகளை அமைத்து தர திட்டமிடப்பட்டுள்ளதாக பிரிஸ்ட்டல் பல்கலைக்கழகத்தின் சம உரிமை, சுதந்திரம், அணுகுமுறை சார்ந்த விவகாரங்களுக்கான அதிகாரி ஸல்லி பேட்டர்சன் தெரிவித்துள்ளார். #BristolUniversity #neutralunitoilets
Tags:    

Similar News