செய்திகள்
4-வது மாடியில் இருந்து குழந்தை வீசப்படும் காட்சி.

சீனாவில் தீவிபத்து- உயிரைக்கொடுத்து குழந்தைகளை காப்பாற்றிய தாய்

Published On 2018-08-04 11:44 IST   |   Update On 2018-08-04 12:00:00 IST
சீனாவில் தீவிபத்து ஏற்பட்ட போது 4-வது மாடியில் இருந்து வீசி குழந்தைகளை காப்பாற்றிய தாய் தீயில் சிக்கி உயிரிழந்தார்.
பெய்ஜிங்:

சீனாவில் ஹெனான் மாகாணம் ஷுசாங் பகுதியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தீவிபத்து ஏற்பட்டது அதைதொடர்ந்து அங்கிருந்து குடியிருப்பு வாசிகள் வீடுகளில் இருந்து வெளியேறிவிட்டனர்.

ஆனால் ஒரு வீட்டின் தாய் மற்றும் 2 குழந்தைகள் மட்டும் தீயில் சிக்கி கொண்டனர். அவர்களால் தப்பிக்க முடியாதபடி வீட்டின் வெளியே தீ சூழ்ந்து இருந்தது.

எனவே அந்த தாய் முதலில் தனது குழந்தைகளை காப்பாற்ற எண்ணிணார். வீட்டில் இருந்த பெரிய ‘பெட்ஷீட்டை’ ஜன்னல் வழியாக வீசினாள். அதை கட்டிடத்தின் கீழே நின்றிருந்த அக்கம்பக்கத்தினர் வலை போல் விரித்து பிடித்துக் கொண்டனர்.

முதலில் தனது 9 வயது மகனை ஜன்னல் வழியாக வீசினார். பின்னர் 3 வயது மகளையும் தூக்கி எறிந்தார். அவர்களை பெட்ஷீட்டில் லாவகமாக பிடித்து பொது மக்கள் காப்பாற்றினர்.


பின்னர் அவரையும் குதிக்கும்படி வலியுறுத்தினர். அதற்கு அவர் முயற்சி செய்தார். அதற்குள் புகை மூட்டம் அதிகமானதால் அவர் தீப்பிடித்த வீட்டிற்குள்ளேயே மயங்கி விழுந்தார்.

இதற்கிடையே அங்கு வந்த தீயணைப்பு படையினர் காயங்களுடன் அவரை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே ஜன்னல் மூலம் தூக்கி எறிந்து காப்பாற்றப்பட்ட பெண் குழந்தை கீழே விழுந்ததில் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதற்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
Tags:    

Similar News