செய்திகள்

ஓமனுக்கான புதிய இந்திய தூதராக முனு மஹாவர் நியமனம்

Published On 2018-05-14 09:17 IST   |   Update On 2018-05-14 09:17:00 IST
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ஓமனுக்கான புதிய தூதராக முனு மஹாவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். #MunuMahawar
மஸ்கட்:

மஸ்கட்டில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஓமன் நாட்டிற்கான இந்திய தூதராக இந்திரமணி பாண்டே இருந்து வருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்டு 10-ந்தேதி முதல் மஸ்கட் இந்திய தூதரகத்தில் பொறுப்பேற்று பதவி வகித்து வருகிறார். இவரது பொறுப்பு காலத்தில் இந்திய தொழிலாளர் நலனுக்காக பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திரமணி பாண்டே டெல்லியில் உள்ள வெளியுறவுத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதைதொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் ஓமனுக்கான புதிய தூதராக முனு மஹாவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது வெளியுறவுத்துறையில் இணை செயலாளராக பணியாற்றி வருகிறார். அவருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது.

ஓமனுக்கான இந்திய தூதராக முனு மஹாவர் விரைவில் பொறுப்பேற்பார். இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #MunuMahawar
Tags:    

Similar News