செய்திகள்

பாகிஸ்தான் ஆளும்கட்சியில் இருந்து 6 எம்.பி.க்கள் விலகல்

Published On 2018-05-12 10:36 GMT   |   Update On 2018-05-12 10:36 GMT
பாகிஸ்தான் நாட்டின் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள் இம்ரான் கான் கட்சி மற்றும் பலூசிஸ்தான் அவாமி கட்சியில் இணைந்தனர். #PakistanPMLN
இஸ்லாமாபாத்:

பாகிஸ்தானில் பிரதமர் நவாஸ் ஷரிப் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக எழுந்த ‘பனாமா கேட்’ ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து அந்நாட்டின் மிகப்பெரிய நீதி அமைப்பான தேசிய பொறுப்புடைமை நீதிமன்றத்தின் விசாரணைக்கு கடந்த ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

கூட்டு புலனாய்வுக் குழுவின் விசாரணை அறிக்கையை ஆய்வு செய்த உச்ச நீதிமன்றம், நவாஸ் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக கூறி, அவரை தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டது. இதையடுத்து, 28-7-2017 அன்று அவர் பதவியை விட்டு விலகினார். அவருக்கு எதிராக மூன்று ஊழல் வழக்கு விசாரணை நடைபெற்று வருகின்றன. ஆளும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் அவர் விலக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பாகிஸ்தான் நாட்டின் ஆளும்கட்சியான பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து விலகிய 6 எம்.பி.க்கள் மற்றும் அதே கட்சியை சேர்ந்த பஞ்சாப் மாகாண சட்டசபையை உறுப்பினர்கள் இருவர் இன்று இம்ரான் கான் கட்சி மற்றும் பலூசிஸ்தான் அவாமி கட்சியில் இணைந்தனர். #PakistanPMLN

Tags:    

Similar News