செய்திகள்

எரிமலை வெடிப்பு காரணமாக மூடப்பட்ட பாலி விமான நிலையம் மீண்டும் திறப்பு

Published On 2017-11-29 14:31 GMT   |   Update On 2017-11-29 14:31 GMT
இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் எரிமலை சீற்றம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்ட விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டதால் சுற்றுலாப்பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
ஜகார்த்தா:

இந்தோனேசியா தீவுக் கூட்டங்கள் அடங்கிய நாடு. இங்கு பல தீவுகளில் எரிமலைகள் உள்ளன. இங்குள்ள பால தீவில் ‘ஆகங்’ என்ற எரிமலை உள்ளது. இந்த எரிமலை கடந்த 22-ம் தேதி வெடிக்க தொடங்கியது. அதில் இருந்து கரும்புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுந்தது.

எனவே அதன் அருகே தங்கியிருக்கும் கிராம மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டது. அதை தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் குடும்பம் மற்றும் கால் நடைகளுடன் வெளியேறி விட்டனர்.

இந்நிலையில், எரிமலை சீற்றத்தின் காரணமாக பாலி தீவில் உள்ள சர்வதேச விமான நிலையம் கடந்த இரண்டு நாட்களாக மூடப்பட்டிருந்தது. எரிமலையில் இருந்து வெளிவரும் கரும்புகையால் விமான போக்குவரத்துக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இன்று விமான நிலையம் திறக்கப்பட்டது.
Tags:    

Similar News