செய்திகள்

சீனா உதவியுடன் கட்டிய அணுமின் உலையை பாக். பிரதமர் திறந்து வைத்தார்

Published On 2016-12-28 15:08 GMT   |   Update On 2016-12-28 15:08 GMT
சீனா உதவியுடன் கட்டிய 340 மெகாவாட் திறன் கொண்ட அணுமின் உலையை பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் திறந்து வைத்தார்.
பாகிஸ்தான் அரசு சீனாவின் உதவியுடன் இஸ்லாமாபாத்தில் இருந்து 250 கி.மீட்டர் தொலைவில் உள்ள மியான்வலி மாவட்டத்தின் சஷ்மா என்ற இடத்தில் சஷ்மா III என்ற அணுஉலையை கட்டி வந்தது. அதன் இறுதிக்கட்ட பணி முடிந்துள்ள நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று அந்த உலையை திறந்து வைத்தார்.

அணுஉலையை திறந்து வைத்து பேசிய அவர் ‘‘சஷ்மா III அணுஉலையை சுமைகளை குறைப்பதற்கான அரசு நடவடிக்கையின் முக்கியமான மைல்கல்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த அணுஉலை பாகிஸ்தான் மற்றும் சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முறையில் உருவாக்கப்பட்டதாகும். இதே இடத்தில் சஷ்மா- IV அணுஉலை கட்டப்பட்டு வருகிறது.

சஷ்மா- II மற்றும் சஷ்மா- III ஆகிய இரண்டு அணுஉலைகள் மூலம் பாகிஸ்தான் நாட்டிற்கு 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

2030-ற்குள் 8800 மெகாவாட் மின்சாரத்தை அணுஉலைகள் மூலம் தாயரிக்க பாகிஸ்தான் திட்டமிட்டுள்ளது.

Similar News