செய்திகள்

இலங்கையில் தமிழ் அதிகாரிக்கு சிங்கள புத்தபிட்சு கொலை மிரட்டல்

Published On 2016-11-16 06:04 GMT   |   Update On 2016-11-16 06:05 GMT
இலங்கையில் தமிழ் அதிகாரிக்கு போலீசார் முன்னிலையில் புத்த பிட்சு கொலை மிரட்டல் விடுத்தார்.
கொழும்பு:

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் பட்டிகலோயா என்ற இடம் உள்ளது. இது முன்பு தமிழில் மட்டகளப்பு என அழைக்கப்பட்டது. இங்கு தமிழர்கள் அதிக அளவில் உள்ளனர். இவர்களுக்கு அடுத்தபடியாக முஸ்லிம்கள் உள்ளனர்.

சிங்களர்கள் 1.3 சதவீதம் பேர் மட்டுமே மைனாரிட்டியாக வசிக்கின்றனர். இவர்கள் தமிழர் பகுதிக்குள் கொண்டு வந்து தங்க வைக்கப்பட்டவர்கள் ஆவர்.

சிங்களர்கள் மைனாரிட்டியாக இருந்தாலும் அங்கு அவர்களின் ஆதிக்கமும், அடாவடியும் அதிகம் உள்ளது. அதற்கு உதாரணமாக சமூக வலைதளங்களில் ஒரு வீடியோ வைரலாக பரவியது.

அதாவது அங்கு பணிபுரியும் ஒரு தமிழ் கிராம நிர்வாக அதிகாரியை சிங்கள புத்தபிட்சு கொலை மிரட்டல் விடுத்தார். அதுவும் போலீஸ் அதிகாரிகளின் முன்னிலையில் அச்சம்பவம் நடந்தது. கொலை மிரட்டல் விடுத்த புத்தபிட்சு பெயர் அம்பிதிய சுமன் ரத்னா.

தமிழ் அதிகாரியை பார்த்து சிங்கள புத்தபிட்சு கடுங்கோபத்துடன் ‘நீங்கள்’ அனைவரும் ‘புலிகள்’ விடுதலைப்புலிகள் இயக்கத்தை குறிப்புடன் கூறி திட்டினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார்.

அதற்கு அப்பகுதி தமிழ் அமைப்புகள் மட்டுமின்றி சிங்கள அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். உள்நாட்டு போர் முடிந்து மறுசீரமைப்பு நடைபெறும் இச்சமயத்தில் ஒரு சிலரின் இது போன்ற செயல்கள் முன்னேற்றத்துக்கு தடை ஏற்படுத்தும் என கூறினர்.

Similar News