செய்திகள்

எல்லையில் பதற்றம்: வடக்கு நகரங்களுக்கான விமானங்களை ரத்து செய்தது பாகிஸ்தான்

Published On 2016-09-21 21:02 IST   |   Update On 2016-09-21 21:03:00 IST
இந்தியா-பாகிஸ்தான் இடையே தற்போது ஏற்பட்டுள்ள அசாதார சூழ்நிலை காரணமாக, வடக்கு நகரங்களுக்கான விமானங்களை பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் இன்று ரத்து செய்துள்ளது.
இஸ்லாமாபாத்:

வடக்கு காஷ்மீரின் உரி பகுதியில் உள்ள இந்திய ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 18 வீரர்கள் உயிரிழந்தனர். ராணுவம் நடத்திய பதில் தாக்குதலில் 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மற்றொரு பகுதியில் ஊடுருவ முயற்சி செய்த தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தீவிரவாதிகளின் பதுங்கிடம் அழிக்கப்பட்டு ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 

எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தினால், உரிய பதிலடி கொடுக்க மத்திய அரசு முழு சுதந்திரம் அளித்துள்ளது. 

இவ்வாறு எல்லைப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால், பாகிஸ்தான் வடக்கு நகரங்களுக்கான விமான சேவை நிறுத்தப்பட்டுள்ளது. கில்கிட், கில்கிட்-பல்டிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள ஸ்கார்டு, கைபர் பாக்துன்க்வா மாகாணத்தில் உள்ள சித்ரல் ஆகிய பகுதிகளுக்கான விமானங்களை பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன்ஸ் ரத்து செய்தது. 

வடக்கு பகுதிகளில் உள்ள விமான தளமும் மூடப்படுள்ளது. பாகிஸ்தான் போர் விமானங்கள் அங்கு சென்று கண்காணிக்க வசதியாக விமானத் தளம் மூடப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

Similar News