உலகம்

ஜெர்மனியில் துணிகரம்: ஹம்பர்க் ரெயில் நிலைய கத்திக்குத்து தாக்குதலில் 17 பேர் காயம்

Published On 2025-05-24 02:10 IST   |   Update On 2025-05-24 02:10:00 IST
  • ஜெர்மனியில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றுள்ளது.
  • காயம் அடைந்தவர்களின் 3 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

முனீச்:

ஜெர்மனியின் ஹம்பர்க் ரெயில் நிலையத்தில் கத்திக்குத்து தாக்குதல் நடைபெற்றது. ரெயிலுக்காக காத்துக் கொண்டிருந்தவர்கள் மீது திடீரென மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதலில் 17 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கத்தியால் தாக்கியவரை அங்கிருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

தாக்குதல் நடத்தியதன் நோக்கம், அவரது பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News