செய்திகள்
இந்தியாவில் லெனோவோ டேப் 4 சீரிஸ் அறிமுகம்
லெனோவோ நிறுவனத்தின் டேப் 4 சீரிஸ் டேப்லெட்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய மாடல்களின் விலை மற்றும் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
லெனோவோ நிறுவனத்தின் புதிய டேப்லெட் மாடல்கள் இந்தியாவில் வெளியாகியுள்ளது. டேப் 4 சீரிஸ்-இன் கீழ் வெளியாகியுள்ள டேப் 4 8 விலை ரூ.12,990, டேப் 4 8 பிளஸ் ரூ.16,990, டேப் 4 10 பிளஸ் 3ஜிபி ரேம் மாடல் ரூ.24,990 மற்றும் டேப் 4 10 பிளஸ் 4 ஜிபி ரேம் மாடல் ரூ.29,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படும் லெனோவோ டேப்லெட்களில் கைரேகை ஸ்கேனர், மற்றும் மல்டி-யூசர், மல்டி-ஸ்பேஸ் ஆப்ஷன்களை கொண்டுள்ளது.
8 இன்ச் அளவு கொண்ட டேப் 4 8 டேப்லெட்டில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 10 இன்ச் டேப் 4 10 பிளஸ் மாடலில் 3 ஜிபி ரேம் + 16 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களிலும் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் குவாட்கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.
டேப் 4 8 பிளஸ் மற்றும் டேப் 4 10 பிளஸ் மாடல்களில் 2.0 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஆக்டாகோர் பிராசஸர், 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இந்த சாதனங்களில் வழங்கப்பட்டுள்ள பேட்டரி சீரான பயன்பாட்டில் 20 மணி நேர பேட்டரி பேக்கப் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய வாடிக்கையாளர்களின் பல்வேறு பயன்பாடுகளுக்கும் ஏற்ற டேப்லெட் மாடலாக இவை இருக்கும் என லெனோவோ இந்தியா நிறுவன விற்பனை பிரிவு தலைவர் பாஸ்கர் சௌத்ரி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.