செய்திகள்

ஒன்பிளஸ் 5 ஃபிளாக்‌ஷிப் கில்லர்: சிறப்பம்சங்கள் மற்றும் முழு தகவல்கள்

Published On 2017-06-21 04:58 GMT   |   Update On 2017-06-21 04:58 GMT
ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஒன்பிளஸ் 5 ஃபிளாக்‌ஷிப் கில்லர் ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இரண்டு மாடல்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஸ்மார்ட்போனின் முழு தகவல்களை பார்ப்போம்.
சான்பிரான்சிஸ்கோ:

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்‌ஷிப் கில்லர் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஜூன் 22-ந்தேதி வெளியாக இருக்கும் ஒன்பிளஸ் 5 இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டுள்ளது. 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி மற்றும் 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

சர்வதேச சந்தையில் 6 ஜிபி ரேம் கொண்ட ஒன்பிளஸ் 5 479 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.31,000 மற்றும் 8 ஜிபி ரேம் கொண்ட மாடல் 499 டாலர்கள் அதாவது இந்தி்ய மதிப்பில் ரூ.32,300 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

புதிய ஒன்பிளஸ் 5 ஃபிளாக்‌ஷிப்  ஸ்மார்ட்போன் அந்நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட ஒன்பிளஸ் 3 மற்றும் ஒன்பிளஸ் 3டி ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடல் ஆகும். இதோடு ஒன்பிளஸ் நிறுவனத்தின் விலை உயர்ந்த ஸ்மார்ட்போன் என்ற பெருமையையும் ஒன்பிளஸ் 5 பெற்றுள்ளது.   



ஒன்பிளஸ் 5 சிறப்பம்சங்கள்:

* 5.5 இன்ச் ஃபுல் எச்டி, AMOLED ஸ்கிரீன்
* குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிபிசெட்
* 6 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
* 20 எம்பி, 16 எம்பி கேமரா மாட்யூல், 2X ஆப்டிக்கல் சூம் வசதி
* 16 எம்பி செல்ஃபி கேமரா
* 3300 எம்ஏஎச் பேட்டரி
* ப்ளூடூத், என்எஃப்சி, வைபை
* எல்டிஇ, வோல்ட்இ

ஆப்பிள், சாம்சங், சோனி, எல்ஜி போன்ற நிறுவனங்களின் ஃபிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விலையை விட ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஒன்பிளஸ் 5 ஆண்ட்ராய்டு 7.1.1 நௌக்கட் இயங்குதளம், ஆக்சிஜன் ஒ.எஸ். 4.5.0 கொண்டு இயங்குவதோடு ஸ்லேட் கிரே மற்றும் மிட்நைட் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது.
Tags:    

Similar News