செய்திகள்

டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர்: ஆப்பிள், சாம்சங்-ஐ முந்திய சீன நிறுவனம்

Published On 2017-06-17 13:48 IST   |   Update On 2017-06-17 13:48:00 IST
ஸ்மார்ட்போன்களில் கட்டாய அம்சமாகிவிட்ட கைரேகை ஸ்கேனர்கள் பொதுவாக பிரைமரி கேமரா அருகில் அல்லது ஹோம் பட்டனில் வழங்கப்பட்டு வந்த நிலையில், டிஸ்ப்ளேவினுள் கைரேகை ஸ்கேனர் வழங்குவதில் சீன நிறுவனம் முந்தியுள்ளது.
பீஜிங்:

ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் கைரேகை ல்கேனர் வழங்க முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களான ஆப்பிள் மற்றும் சாம்சங் திணறி வரும் நிலையில், சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனரினை டிஸ்ப்ளேவில் வழங்கியுள்ளது. 

விவோ எக்ஸ் 9 பிளஸ் என அழைக்கப்படும் ஸ்மார்ட்போனின் பணிகள் நிறைவுற்றதாக கூறப்படுகிறது. புதிய தொழில்நுட்பம் ஸ்மார்ட்போனில் கூடுதல் இட வசதியை வழங்கும். இதனால் வழக்கமாக கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்ட இடத்தில் பல்வேறு இதர வசதிகளை வழங்க முடியும்.   

இதுகுறித்து கிஸ்சைனா வெளியிட்டுள்ள தகவல்களில் டிஸ்ப்ளேவில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்படும் முதல் ஸ்மார்ட்போன் விவோ எக்ஸ் 9 தான் என குறிப்பிட்டுள்ளது. இதை விவரிக்கும் வீடியோ வெய்போ தளத்தில் பதிவு செய்யப்பட்டு பின் நீக்கப்பட்டது. வெய்போ வீடியோவில் டிஸ்ப்ளேவை தொட்டே ஸ்மார்ட்போன் அன்லாக் செய்யப்படுகிறது.   

புதிய விவோ எக்ஸ் 9 பிளஸ் ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச் ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 652 பிராசஸர், மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்படும் என்றும் 20 எம்பி + 8 எம்பி டூயல் கேமராக்கள் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

Similar News