தமிழ்நாடு செய்திகள்

கீழடி விவகாரத்தில் தமிழக அரசு ஒத்துழைக்க தயங்குவது ஏன்? - மத்திய அமைச்சர் கேள்வி

Published On 2025-06-12 01:45 IST   |   Update On 2025-06-12 01:46:00 IST
  • எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.
  • தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

கீழடி அகழாய்வு குறித்த ஆய்வுகளை அரசியல் ஆக்காமல், மேலும் அறிவியல் பூர்வமான தரவுகளைச் சேகரிப்பதில் மத்திய அரசுக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மத்திய கலாசாரத் துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள 'எக்ஸ்' பதிவில், "தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, நாங்கள் எந்த அறிக்கையையும் வெளியிட சிறிதும் தயங்கவில்லை.

உண்மையில், இதுபோன்ற ஆராய்ச்சிகள், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டால், நாங்களும் தங்களுடன் சேர்ந்து பெருமைகொள்வோம்.

ஆனால் இன்றைய அறிவியல் உலகின் ஏற்றுக்கொள்ளலுக்கு, எங்களுக்கு இன்னும் அறிவியல்பூர்வமான, வலுவான ஆதாரங்கள் தேவை.

அதனால்தான், அகழ்வாராய்ச்சி தரவுகளை அரசியலாக்க அவசரப்படுவதற்குப் பதிலாக, அறிவியல் பூர்வமான கூடுதல் தரவுகள் கிடைக்கும் அளவிற்கு ஆராய்ச்சியினை தொடர விரும்பும் மத்திய அரசிற்கு ஆதரவளிக்குமாறு, தமிழக அரசிடம் நாங்கள் கேட்டுக் கொண்டோம். தமிழக அரசு ஏன் ஒத்துழைக்கத் தயங்குகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News