தமிழ்நாடு செய்திகள்

இன்று காதலர் தினம்... பெயருக்குள் மறைந்திருக்கும் வரலாறு...

Published On 2025-02-14 08:13 IST   |   Update On 2025-02-14 08:13:00 IST
  • இனிமேல் ராணுவத்தில் உள்ளவர்கள் திருமணமே செய்யக் கூடாது என மன்னர் உத்தரவிட்டார்.
  • அடித்தே கொலை செய்ய வேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை.

காதலர் தினத்தை ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ந் தேதி கொண்டாடுகிறோம். இந்த நாளை 'வேலன்டைன்ஸ் டே' என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றோம். இந்த பெயருக்கு பின்னால் ஒரு மனிதர் இருக்கிறார், அவரது உயிர்த் தியாகம் இருக்கிறது. அவர் யார்?, அவரது தியாகம் எப்படிப்பட்டது என்பதை இத்தொகுப்பில் அறிந்து கொள்வோம்.

ரோம் நகரை இரண்டாம் கிளாடியஸ் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவருடைய ராணுவ வீரர்கள் பலர் திருமணம் செய்ய தொடங்கியதால் குழந்தைகள் மீதும், மனைவி மீதும் அதிக அன்பு செலுத்தி வந்தனர். இதனால் ராணுவப் பணியில் அவர்களது கவனம் குறையத் தொடங்கியது.



இதை அறிந்த மன்னர், இனிமேல் ராணுவத்தில் உள்ளவர்கள் திருமணமே செய்யக் கூடாது என உத்தரவிட்டார். இதனால் பலரும் அச்சப்பட்டனர். அந்த காலத்தில் தான் வேலன்டைன் எனும் பாதிரியார் வாழ்ந்து வந்தார். அவர் மன்னருக்கு தெரியாமல் காதலர்கள் பலருக்கு ரகசிய திருமணம் செய்து வைத்தார். இந்த செய்தியை அறிந்த மன்னர் அவரை சிறையில் அடைத்து மரணதண்டனை கொடுத்தார். அடித்தே கொலை செய்ய வேண்டும் என்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட தண்டனை.

ஆனால் அதற்கு பதிலாக அவரது தலையை வெட்டி கொலை செய்தனர். அவர் கொலை செய்யப்பட்ட நாள்தான் பிப்ரவரி 14. அதனால்தான் இந்த நாள் வேலன்டைன்ஸ் டே என அழைக்கப்பட்டது. இவ்வாறு மகிழ்ச்சியாய் கொண்டாடும் காதலர் தினத்துக்குள் ஒரு மனிதரின் உயிர்த் தியாகம் மறைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News