தமிழ்நாடு செய்திகள்

தலைமைச்செயலக கட்டிடத்தில் விரிசல்- அமைச்சர் விளக்கம்

Published On 2024-10-24 12:36 IST   |   Update On 2024-10-24 12:36:00 IST
  • சுருங்கும் தன்மை காரணமாக டைல்சில் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது.
  • பூச்சு பணிகள் சரியாக செய்யப்படவில்லை என கூறுவது தவறான குற்றச்சாட்டு.

சென்னை தலைமைச் செயலகத்தில் திடீரென அதிர்வு உணரப்பட்டதால், அங்கு பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும் வெளியேறினர். இதனால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள முதல் தளத்தில் டைல்சில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், விரிசலை பார்த்தவுடன் அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் வெளியே ஓடி வந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சென்னை தலைமைச்செயலக கட்டிடம் உறுதியாக உள்ளது. அச்சம் வேண்டாம்.

* தலைமைச்செயலக கட்டிடத்தின் உறுதித்தன்மை உருக்குலையவில்லை.

* டைல்சில் ஏற்பட்ட ஏர் கிராக்கை அலுவலக ஊழியர்கள் விரிசல் என நினைத்து பயந்துவிட்டனர்.

* சுருங்கும் தன்மை காரணமாக டைல்சில் ஏர் கிராக் ஏற்பட்டுள்ளது.

* தற்போது பொறியாளர்கள் பரிசோதித்ததில் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிய வந்துள்ளது.

* 1974-ல் கட்டப்பட்ட கட்டிடத்தில் 14 வருடங்களுக்கு முன் சிறுசிறு டைல்ஸ்கள் போடப்பட்டது.

* பூச்சு பணிகள் சரியாக செய்யப்படவில்லை என கூறுவது தவறான குற்றச்சாட்டு.

* 1-க்கு 1 என்று அளவில் போடப்பட்டுள்ள பழைய டைல்ஸ்கள் அகற்றப்பட்டு 2-க்கு 2 டைல்ஸ் நாளையே போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

Tags:    

Similar News