தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு குறைப்பு
- அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்ததால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டு வருகிறது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்ததால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 850 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர்மின் நிலையம் மற்றும் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.