தமிழ்நாடு செய்திகள்
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 18,564 கனஅடியாக அதிகரிப்பு
- மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 564 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.
- மேட்டூர் அணையில் தற்போது 93.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 119.71 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 18 ஆயிரத்து 564 கனஅடியாக அதிகரித்து காணப்பட்டது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.01 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.