தமிழ்நாடு செய்திகள்

தி.மு.க. முன்னாள் எம்.பி., எல்.கணேசன் காலமானார்

Published On 2026-01-04 09:12 IST   |   Update On 2026-01-04 09:12:00 IST
  • 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதன்மைத் தளபதியாக வழிநடத்திய எல்.கணேசன் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.
  • எல்.கணேசன் 3 முறை எம்.எல்.ஏ.வாகவும், இரு முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார்.

மொழிப்போர் தளபதி என்றழைக்கப்பட்ட தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழு உறுப்பினர் எல். கணேசன் காலமானார். அவருக்கு வயது 92.

வயது மூப்பால் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலமானார். 1965-ல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் முதன்மைத் தளபதியாக வழிநடத்திய எல்.கணேசன் மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டவர்.

மொழிப்போரில் ஈடுபட்டு மிசா சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட எல்.கணேசன் 3 முறை எம்.எல்.ஏ.வாகவும், இரு முறை எம்.பி.யாகவும் இருந்துள்ளார். எல்.கணேசன் உடல் தஞ்சாவூர் கண்ணந்தங்குடி கீழையூரில் அடக்கம் செய்யப்பட உள்ளது. 

Tags:    

Similar News