தமிழ்நாடு செய்திகள்
டிட்வா புயல்... தயார் நிலையில் பேரிடர் மீட்புக்குழு - தலைமை செயலாளர் தகவல்
- மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
- மக்கள் தங்குவதற்கு தேவையான முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
சென்னை:
டிட்வா புயல் வட தமிழக கடலோர பகுதியை நெருங்கி வருவதால் தமிழகத்தில் வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு தலைமை செயலாளர் முருகானந்தம் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மாவட்ட கலெக்டர்கள் தயார் நிலையில் உள்ளனர். மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர். மாநில கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தேவையான அறிவுறுத்தலும் வழங்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்குவதற்கு தேவையான முகாம்களும் தயார் நிலையில் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.