தமிழ்நாடு செய்திகள்

சென்னை புறநகர் ஏ.சி. மின்சார ரெயில் சேவையின் நேரம் மாற்றியமைப்பு

Published On 2025-04-29 19:17 IST   |   Update On 2025-04-29 19:17:00 IST
  • தாம்பரத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டிற்கு 7.35 மணிக்கு சென்றடையும்.
  • செங்கல்பட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை இரவு 10.50 மணிக்கு வந்தடையும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை கடற்கரை- தாம்பரம், கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் மின்சார ரெயில்களில் பயணம் செய்து வருகிறார்கள்.

ஆனால் இந்த வழித்தடத்தில் குளிர்சாதன வசதி இல்லாத சாதாரண மின்சார ரெயில்களே இயக்கப்பட்டு வந்தன. எனவே இந்த வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கையை ஏற்று சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி கடந்த 19ஆம் தேதி 12 பெட்டிகள் கொண்ட ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. இது தொடர்பாக பயணிகளிடம் தெற்கு ரெயில்வே கருத்து கேட்டது. பெரும்பாலான பயணிகள் ஏ.சி. ரெயில் சேவையை வரவேற்றனர். அதேவேளையில் இயக்கப்படும் நேரம் தொடர்பாக தங்களது ஆலோசனைகளை வழங்கினர்.

இதனடிப்படையில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. வருகிற 2ஆம் தேதியில் இருந்து கீழ்கண்டவாறு ரெயில் சேவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

(49001) தாம்பரத்தில் இருந்து காலை 6.50 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டிற்கு 7.35 மணிக்கு சென்றடையும்.

(49002) செங்கல்பட்டில் இருந்து காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரையை 9.25 மணிக்கு வந்தடையும்.

(49003) ரெயில் சென்னை கடற்கரையில் இருநது 9.41 மணிக்கு புறப்பட்டு தாம்பரத்தை காலை 10.36 மணிக்கு சென்றடையும்.

(49004) தாம்பரத்தில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரைக்கு 13.55 மணிக்கு வந்தடையும்.

(49005) சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 2.30 மணிக்கு புறப்பட்டு, செங்கல்பட்டுக்கு மாலை 4 மணிக்கு வந்தடையும்.

(49006) செங்கல்பட்டில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரையை மாலை 6 மணிக்கு வந்தடையும்.

(49007) சென்னை கடற்கரையில் இருந்து இரவு 6.18 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டை இரவு 7.50 மணிக்கு வந்தடையும்.

(49008) செங்கல்பட்டில் இருந்து இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு, தாம்பரத்தை இரவு 10.50 மணிக்கு வந்தடையும்.

Tags:    

Similar News