தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலையில் மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர். அருகில் கலெக்டர் பாஸ்கர பாண்டியன்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் மத்திய குழுவினர் ஆய்வு

Published On 2024-12-10 13:41 IST   |   Update On 2024-12-10 13:41:00 IST
  • வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது.
  • தென்பெண்ணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை பார்வையிட்டனர்.

வேங்கிக்கால்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் மழை பாதிப்பு குறித்து மத்தியக் குழுவினர் இன்று ஆய்வு செய்தனர். வ.உ.சி. நகரில் ஃபெஞ்சல் புயல் காரணமாக மண் சரிவு ஏற்பட்டது. இதில் வீடு புதைந்தது. வீட்டில் இருந்த குழந்தைகள் உட்பட 7 பேர் மண்ணில் புதைந்து பரிதாபமாக உயிரிழந்தனர்.

மத்திய குழுவினர் டாக்டர் பொன்னுசாமி, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இயக்குனர் சரவணன் (ஐதராபாத்), கே எம் பாலாஜி (சென்னை) ஆகியோர் உட்பட அதிகாரிகள் மண் சரிவு ஏற்பட்ட இடத்திற்கு பாதுகாப்பு உபகரணங்களுடன் சென்று மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர்.

மேலும் கீழ்பென்னாத்தூர் அடுத்த கோனாகல், சின்ன காகினூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட விவசாய நிலம், தென்பெண்ணை வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட பாலம் ஆகியவற்றைப் பார்வையிட்டனர்.

ஆய்வின்போது கலெக்டர் பாஸ்கர பாண்டியன் உட்பட அதிகாரிகள் உடன் இருந்தனர். 

Tags:    

Similar News