தமிழ்நாடு செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க திருப்பூரில் இருந்து படையெடுத்து செல்லும் பீகார் தொழிலாளர்கள்

Published On 2025-11-01 15:06 IST   |   Update On 2025-11-01 15:06:00 IST
  • வருகிற 6-ந்தேதி பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
  • திருப்பூரில் தங்கி இருந்த தொழிலாளர்களும் தற்போது தங்கள் மாநில தேர்தலில் வாக்களிக்க சொந்த மாநிலத்திற்கு செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர்.

திருப்பூர்:

தொழில் நகரமான திருப்பூரில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களும், வடமாநிலங்களை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருகின்றனர்.

இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் திருப்பூரில் தங்கி இருந்து பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானவர்கள் தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊர் சென்ற நிலையில் வருகிற 6-ந்தேதி பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திரும்பி வராமல் அங்கேயே தங்கியுள்ளனர். மேலும் திருப்பூரில் தங்கி இருந்த தொழிலாளர்களும் தற்போது தங்கள் மாநில தேர்தலில் வாக்களிக்க சொந்த மாநிலத்திற்கு செல்ல முனைப்பு காட்டி வருகின்றனர்.

இதன் காரணமாக திருப்பூர் ரெயில் நிலையம் வழியாக பீகார் செல்லும் ரெயில்களில் கூட்டம் அலைமோதி காணப்படுகிறது.

Tags:    

Similar News