தமிழ்நாடு செய்திகள்

இன்று 71-வது ஆண்டில் அடியெடுத்து வைத்த பவானிசாகர் அணை

Published On 2025-08-19 12:28 IST   |   Update On 2025-08-19 12:28:00 IST
  • 1948 ஆம் ஆண்டு பவானிசாகர் அணையின் கட்டுமான பணி தொடங்கி 1955 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.
  • பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற 21 மதகு அமைக்கப்பட்டுள்ளது.

ஈரோடு:

தமிழகத்தில் தஞ்சை டெல்டா பாசனத்துக்கு அடுத்த படியாக மிகப்பெரிய பாசன பரப்பு, தென்னிந்தியாவின் மிகப்பெரிய மண் அணை என்ற பெருமை பெற்றது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2.47 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

1948 ஆம் ஆண்டு பவானிசாகர் அணையின் கட்டுமான பணி தொடங்கி 1955 ஆம் ஆண்டு நிறைவடைந்தது. 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19-ம் தேதி அப்போதைய முதலமைச்சராக இருந்த காமராஜர் அணையை திறந்து வைத்தார். பவானிசாகர் அணையில் இருந்து தண்ணீரை வெளியேற்ற 21 மதகு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் வெளியேற்றப்படும் நீரின் மூலம் 8 மெகாவாட் மின்சாரமும், கீழ்பவானி வாய்க்காலில் வெளியேற்றப்படும் நீரில் 8 மெகாவாட் என 16 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அணை தொடக்கத்திலிருந்து தற்போது வரை 23 முறை முழு கொள்ளளவை எட்டி உள்ளது. இத்தகைய பெருமை வாய்ந்த பவானிசாகர் அணை இன்று 70 ஆண்டுகளை கடந்து 71-வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது.

Tags:    

Similar News