தமிழ்நாடு செய்திகள்
அண்ணா பல்கலை வளாகத்தில் மாணவர் தற்கொலை- போலீசார் விசாரணை
- மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
- கடந்த 10 நாட்களாக கல்லூரி பிடிக்கவில்லை என்று நண்பர்களிடம் சபரீசன் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் உள்ள விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலையில் 2-ம் ஆண்டு B.E.லெதர் டெக்னாலஜி படித்து வரும் சபரீசன் (19) என்ற மாணவர் இன்று காலை விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மாணவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கடந்த 10 நாட்களாக கல்லூரி பிடிக்கவில்லை என்று நண்பர்களிடம் சபரீசன் தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.
தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வரும் அண்ணா பல்கலைக்கழகத்தின் வளாகத்தில் மாணவர் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.