தமிழ்நாடு செய்திகள்
null

2028 மகாமக திருவிழாவை என்.டி.ஏ. கூட்டணியின் அதிமுக அரசு நடத்தும் - நயினார் நாகேந்திரன்

Published On 2025-11-01 05:38 IST   |   Update On 2025-11-01 06:31:00 IST
  • 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகாமகம் நடக்கும்
  • 2028-லும் மகாமகம் நடக்கப்போகிறது.

கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் மகாமகப் பெருவிழா உலகப்புகழ் பெற்ற ஒரு விழாவாகும்.

இந்நிலையில் கூட்டம் ஒன்றில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், "அதிமுக எப்போது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போது எல்லாம் கும்பகோணத்தில் மகாமகம் நடத்தப்படும்.

2028-லும் மகாமகம் நடக்கப்போகிறது, அதையும் தேசிய ஜனநாயக கூட்டணியுடைய அதிமுக அரசு தான் நடத்தி வைக்கும்" என்று பேசியுள்ளார்.

கடைசியாக 2016 இல் மகாமகம் நடந்தபோது அதிமுக ஆட்சியில் இருந்தது. அடுத்த மகாமகம் 2028 இல் நடைபெற உள்ள நிலையில் 2026 இல் சட்டமன்றத் தேர்தலை குறிப்பிட்டு நயினார் நாகேந்திரன் பேசியுள்ளார்.

1992ஆம் ஆண்டு நடைபெற்ற மகாமக நிகழ்வில் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவும், அவரது தோழி வி.கே.சசிகலாவும் பங்கேற்று புனித நீராடியபோது நெரிசல் ஏற்பட்டு, சுமார் 50 பேர் வரை உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

Similar News