தமிழ்நாடு

கொலை நடத்த இடத்தில் ஏ.டி.எஸ்.பி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர்

வடமதுரை அருகே வாலிபர் படுகொலை- போலீசார் விசாரணை

Published On 2022-08-26 04:34 GMT   |   Update On 2022-08-26 04:34 GMT
  • கொலை செய்யப்பட்டவர் முத்தனம்பட்டியை சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது.
  • கண்காணிப்பு கேமராவில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடமதுரை:

திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை வடமதுரை அருகே வெள்ளபொம்மன்பட்டியில் இன்று காலை சுமார் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்த நிலையில் ஒரு புதருக்குள் கிடந்தார்.

இதுகுறித்து வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனைதொடர்ந்து ஏ.டி.எஸ்.பி சந்திரன் தலைமையில் டி.எஸ்.பி துர்க்காதேவி, வடமதுரை இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

சாலையில் இருந்து 15 மீ தூரத்தில் அவர் இறந்து கிடந்தார். அவர் தலையில் கல்லை தூக்கிபோட்டு கொலை செய்ததற்கான தடயங்கள் இருந்தன. நீல நிற பேண்டும், டீ-சர்ட்டும் அணிந்திருந்த அவர் யார்? எந்த ஊர்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கொலை செய்யப்பட்டவர் முத்தனம்பட்டியை சேர்ந்த குமார் என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மோப்ப நாய் வாலிபர் குமாரின் உடலை முகர்ந்து பார்த்துவிட்டு வெள்ளபொம்மன்பட்டி பிரிவு வரை சென்று நின்றது. இதனையடுத்து போலீசார் வாலிபரின் உடலை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்பகுதியில் ஏதேனும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்றும், அதில் கொலையாளிகள் உருவம் பதிவாகி உள்ளதா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News