தமிழ்நாடு செய்திகள்
காஞ்சிபுரத்தில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு முகாமில் எம்.எல்.ஏ. ஆய்வு
- கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
- விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்யும் முகாம் தற்போது நடந்து வருகிறது.
காஞ்சிபுரம்:
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த விண்ணப்பங்களை பெற்று பதிவு செய்யும் முகாம் தற்போது நடந்து வருகிறது.
காஞ்சிபுரம் நகரில், வைகுண்ட பெருமாள் கோவில் தெரு, அசோக் நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் பதிவு செய்யும் சிறப்பு முகாமை எழிலரசன் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு செய்து பார்வையிட்டார். அப்போது, வட்டாட்சியர் புவனேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.