தமிழ்நாடு செய்திகள்

வாழப்பாடி அருகே மழை வேண்டி யாசகம் பெற்ற உணவை அம்மனுக்கு படைத்து பெண்கள் வினோத வழிபாடு

Published On 2023-09-02 11:40 IST   |   Update On 2023-09-02 11:40:00 IST
  • வாழப்பாடி பகுதியில் உள்ள மக்கள் முன்னோர்கள் வழியில் மரபு மாறாமல் பல வினோத வழிபாட்டு முறைகளை இன்றளவும் கைவிடாமல் தொடர்ந்து செய்து வருகின்றனர்.
  • வினோத வழிபாட்டால் தொடர்ந்து 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் உள்ள மக்கள் முன்னோர்கள் வழியில் மரபு மாறாமல் பல வினோத வழிபாட்டு முறைகளை இன்றளவும் கைவிடாமல் தொடர்ந்து செய்து வருகின்றனர்.

குறிப்பாக வறட்சி நிலவும் காலங்களில் காவல் தெய்வங்களுக்கு ஆடு, கோழி, பன்றி பலியிட்டு முப்பூஜை வழிபாடு நடத்துதல், அம்மனுக்கு கூழ் ஊற்றுதல், வயதில் மூத்த கைம்பெண்களுக்கு பாத பூஜை செய்து வழிபாடு நடத்துதல், கிராமத்தின் எல்லைச்சாமிக்கு பன்றி பலி கொடுத்தல் போன்ற வழிபாடுகளை தொடர்ந்து செய்து வருகின்றனர்.

இந்த வரிசையில் வாழப்பாடி அடுத்த மேலூர் கிராமத்தில் மழை பொழிய வேண்டி கடந்த 3 நாட்களாக சிறுவர்-சிறுமியர்கள், பெண்கள் வீடு வீடாக சென்று உணவு யாசகம் பெற்று அதனை அங்குள்ள மாரியம்மன் மற்றும் விநாயகருக்கு படையல் வைத்து கும்மியடித்து வினோத வழிபாடு நடத்தினர். இந்த வினோத வழிபாட்டால் தொடர்ந்து 3 நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறதென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

Tags:    

Similar News