தமிழ்நாடு செய்திகள்

வேளாங்கன்னி மாதா கோவில்


மாதா கோவில் திருவிழா- சென்னையில் இருந்து வேளாங்கன்னிக்கு சிறப்பு பஸ்கள்

Published On 2022-08-20 12:52 IST   |   Update On 2022-08-20 12:52:00 IST
  • திருவிழாவை காண தமிழகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் செல்வது வழக்கம்.
  • பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய முன்பதிவு செய்து கொள்வது நல்லது.

சென்னை:

வேளாங்கன்னி மாதா திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த வருடத்திற்கான விழா வருகிற 29-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது.

10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நாளாக செப்டம்பர் 8-ந் தேதி வேளாங்கன்னி மாதா பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது.

இந்த திருவிழாவை காண தமிழகம் முழுவதும் இருந்து கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி பிற மதத்தினரும் செல்வது வழக்கம். சிலர் சொந்த ஊரில் இருந்து நடைபயணமாக செல்வார்கள்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கன்னிக்கு பஸ், கார்களிலும் ஏராளமானவர்கள் செல்வார்கள். பொதுமக்கள் நலன் கருதி அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை கோயம்பேட்டில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வழக்கமாக இயக்கப்படும் பஸ்கள் தவிர வேளாங்கன்னிக்கு 27-ந் தேதி 25 பஸ்களும் 28-ந் தேதி 25 சிறப்பு பஸ்களும் கூடுதலாக இயக்கப்படும் என்று மேலாண்மை இயக்குனர் இளங்கோவன் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், சிறப்பு பஸ்கள் 2 நாட்கள் விடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மக்களின் தேவைக்கேற்ப பஸ்களை இயக்க தயாராக இருக்கிறோம். சிறப்பு பஸ்களுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

பொதுமக்கள் நெரிசல் இல்லாமல் பயணம் செய்ய முன்பதிவு செய்து கொள்வது நல்லது என்றார்.

Tags:    

Similar News