தமிழ்நாடு

குன்னூர் அருகே குடியிருப்பு வளாகத்தில் சுற்றி திரிந்த சிறுத்தைகளை காணலாம்

குன்னூர் அருகே குடியிருப்புக்குள் சுற்றிய 2 சிறுத்தைகள்- பொதுமக்கள் அச்சம்

Published On 2022-09-03 03:54 GMT   |   Update On 2022-09-03 03:54 GMT
  • குன்னூர் அருகே பேரட்டி பகுதியில் ராமன் என்பவரது வீட்டு வளாகத்தில் 2 சிறுத்தைகள் வலம் வந்துள்ளன.
  • குன்னூா் அம்பிகாபுரம் பகுதியில் வீட்டின் கேட்டை தாண்டி சிறுத்தை கடந்த வாரம் உள்ளே நுழைந்தது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம், குன்னூா் பகுதியில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

குறிப்பாக இரவு நேரங்களில் யானை, சிறுத்தை, கரடி நடமாட்டம் உள்ளது. இதனால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே வசித்து வருகின்றனர்.

குன்னூர் அருகே பேரட்டி பகுதியில் ராமன் என்பவரது வீட்டு வளாகத்தில் 2 சிறுத்தைகள் வலம் வந்துள்ளன. இந்த சிறுத்தைகள், நாய்களை வேட்டையாட வந்துள்ளன. ஆனால், நாய்கள் கூண்டுக்குள் இருந்து சப்தமிட்டதைத் தொடா்ந்து, சிறுத்தைகள் குடியிருப்பு வளாகத்தில் இருந்து வெளியேறின. தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு வந்த கட்டபெட்டு வனத்துறையினா் அப்பகுதியை ஆய்வு செய்தனா்.

இதேபோல குன்னூா் அம்பிகாபுரம் பகுதியில் வீட்டின் கேட்டை தாண்டி சிறுத்தை கடந்த வாரம் உள்ளே நுழைந்தது. இதையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினா் கூண்டு வைத்தும், அவை இன்னும் பிடிபடவில்லை.

பேரட்டி குடியிருப்பு பகுதியில் மக்கள் அதிக அளவில் வசித்து வருகின்றனா். எனவே, எவ்வித அசம்பாவித சம்பவம் நடைபெறும் முன்பாக சிறுத்தைகளை கூண்டு வைத்துப் பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

Similar News