தமிழ்நாடு செய்திகள்

குடிநீர் ஊற்றில் மனித கழிவு கலப்பு- துப்புரவு தொழிலாளர்கள் 2 பேர் கைது

Published On 2023-04-01 09:13 IST   |   Update On 2023-04-01 09:13:00 IST
  • நரிக்குழி ஆடா பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
  • நரிக்குழி ஆடா மக்கள் பலருக்கு கடந்த 3 நாட்களாக வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் நரிக்குழி ஆடா பகுதியில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு கிராமம் அருகே மலைப்பகுதியில் இருந்து ஊற்று தண்ணீர் குடிநீராக வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நரிக்குழி ஆடா மக்கள் பலருக்கு கடந்த 3 நாட்களாக வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் குடிநீரில் மனித கழிவுகள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக ஊட்டி உரக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், துப்புரவு தொழிலாளர்களான ரஞ்சித் (வயது 29), சக்திவேல் (24) ஆகியோர் கடந்த 29-ந் தேதி குந்தா பிக்கட்டியில் உள்ள ஒரு வீட்டில் செப்டிக் டேங்கில் இருந்து மனித கழிவுகளை அகற்றி வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று, நரிக்குழி ஆடா பகுதியில் கொட்டியதும், பின்னர் மழை பெய்ததால் மனித கழிவுகள் ஊற்று தண்ணீரில் கலந்து விட்டதும் தெரியவந்தது.

இதுதொடர்பாக பொது நீர்தேக்கத்தை மாசுபடுத்துதல், நோய் தொற்றை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, ரஞ்சித், சக்திவேலை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News