தமிழ்நாடு

கோயம்பேடு பஸ்நிலையத்தில் வழிதெரியாமல் சுற்றிய இரட்டை சகோதரி மாணவிகள் மீட்பு- காப்பகத்தில் ஒப்படைப்பு

Published On 2023-04-21 08:10 GMT   |   Update On 2023-04-21 08:10 GMT
  • பள்ளி விடுதியில் இருந்து ஓட்டம் பிடித்த இருவரும் சென்னைக்கு வேலை தேடி வந்ததாக தெரிவித்தனர்.
  • மாணவிகள் குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போரூர்:

கோயம்பேடு போலீஸ் நிலையத்தில் நேற்று இரவு 10.30மணி அளவில் 2 சிறுமிகள் வழிதெரியாமல் சுற்றி வந்தனர். இதனால் சந்தேகம் அடைந்த ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் சிறுமிகளிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் திருச்சி மலைக்கோட்டை பகுதியை சேர்ந்த இரட்டை சகோதரிகள் என்பதும் அங்குள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி பிளஸ்-2 படித்து வருவதும் தெரியவந்தது.

தாய்-தந்தையை இழந்த மாணவிகளை பெங்களுரில் வசித்து வரும் அவர்களது உறவினர் ஒருவர் படிக்க வைத்து வருகிறார். இந்தநிலையில் பள்ளி விடுதியில் இருந்து ஓட்டம் பிடித்த இருவரும் சென்னைக்கு வேலை தேடி வந்ததாகவும், கோயம்பேடு பஸ்நிலையத்தில் வழிதெரியாமல் சுற்றியதாகவும் தெரிவித்தனர்.

மேலும் மாணவிகள் தாங்கள் தங்குவதற்கு இடம் வேண்டும் என்று போலீசாரிடம் உதவி கேட்டனர். இதையடுத்து மாணவிகள் இருவருக்கும் போலீசார் அறிவுரை கூறி காப்பகத்தில் தங்க வைத்தனர். அவர்கள் குறித்து உறவினர்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News