தமிழ்நாடு செய்திகள்
நமக்கு பாடம் கற்றுத்தரும் மாணவர்கள் தோல்விகளால் மனம் தளரக்கூடாது- கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு
- மாணவர்கள் தோல்வியை பார்த்து பயப்படக்கூடாது. தோல்வி தான் நமக்கு பாடங்களை கற்றுத் தரும்.
- அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தியில் இந்தியா, தன்னிறைவு பெறும்.
சென்னை:
சென்னை வேலப்பன் சாவடியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியின் பட்டமளிப்பு விழா நடந்தது. இந்த விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
பின்னர் மாணவர்கள் மத்தியில் கவர்னர் ஆர்.என்.ரவி. பேசியதாவது:-
மாணவர்கள் தோல்வியை பார்த்து பயப்படக்கூடாது. தோல்வி தான் நமக்கு பாடங்களை கற்றுத் தரும். தோல்விகளால் மாணவர்கள் மனம் தளரக்கூடாது.
அடுத்த 25 ஆண்டுகளில் எரிசக்தியில் இந்தியா, தன்னிறைவு பெறும். அடுத்த 25 ஆண்டுகளில் சுயசார்பு இந்தியாவை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.