தமிழ்நாடு செய்திகள்

தூத்துக்குடி தொழிலாளி கொலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கைது

Published On 2022-12-01 12:25 IST   |   Update On 2022-12-01 12:25:00 IST
  • ஜெயக்குமார் திருட்டு மோட்டார் சைக்கிளை குறிஞ்சிநகரை சேர்ந்த முருகன் (56) மகன் சரவணன் (25) என்பவரிடம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார்.
  • தனிப்படையினர் முருகன், பொன் வைரவி, சரவணன் ஆகியோரை கைது செய்தனர்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி சின்னகண்ணுபுரத்தை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 45). தொழிலாளி. நேற்று இவர் அப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. சந்தீஷ் மேற்பார்வையில் சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் அடங்கிய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர். அதில் ஜெயக்குமார் திருட்டு மோட்டார் சைக்கிளை குறிஞ்சிநகரை சேர்ந்த முருகன் (56) மகன் சரவணன் (25) என்பவரிடம் ரூ. 5 ஆயிரத்திற்கு விற்பனை செய்துள்ளார்.

இதையறிந்த மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் சரவணனிடம் தகராறு செய்து அதனை எடுத்து சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன் தனது தந்தை முருகனுடன் சென்று மோட்டார் சைக்கிளை விற்பனை செய்த பணத்தை திருப்பி தருமாறு ஜெயக்குமாரிடம் கேட்டுள்ளனர்.

அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த தந்தை-மகன் சேர்ந்து ஜெயக்குமாரை தாக்கி உள்ளனர். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது தெரியவந்தது. மேலும் கொலையில் முருகனின் மனைவி பொன் வைரவி (45) என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து தனிப்படையினர் முருகன், பொன் வைரவி, சரவணன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் கூறும்போது, ஜெயக்குமார் திருட்டு மோட்டார் சைக்கிளை எங்களிடம் விற்பனை செய்துவிட்டார். இதையறிந்த அதன் உரிமையாளர் எங்களிடம் வந்து அதனை எடுத்து சென்றுவிட்டார். இதனால் ஏமாற்றப்பட்டதை அறிந்த எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

எனவே ஜெயக்குமார் வீட்டிற்கு சென்று பணத்தை திருப்பி தருமாறு அவரிடம் கேட்டோம். அப்போது எங்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் நாங்கள் அவரை தாக்கினோம். ஆனால் அவர் எதிர்பாராதவிதமாக இறந்துவிட்டார் என்றனர்.

தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News